முத்துக்கள் எத்தனை முத்துக்களடி தோழி

பூத்த முல்லை மலரிதழில் காலைப் பனி முத்துக்கள்
வியர்த்த உழைப்பாளியின் உடலில் வேர்வையின் முத்துக்கள்
வானத்து முகில் தூவிடும் மழைத்துளி முத்துக்கள்
பார்க்கும் உன் விழிகளில் காதல் ஒளி முத்துக்கள்
பேசும் உன்னிதழ்களில் உருளுதடி பாண்டியன் முத்துக்கள்
கண்டு கண்டு ரசித்த என் இதயமெல்லாம் கவிதை முத்துக்கள்
முத்துக்கள் எத்தனை முத்துக்களடி தோழி!

by KAVIN CHARALAN

Comments (0)

There is no comment submitted by members.