படிப்பறிவு மட்டுமே போறாது

கலித்துறை

படிப்பறிவு மட்டுமே போறாது தீர்வினைக் காணவே!
பட்டறிவும் வேண்டும் அறிவார்ந்த சிந்தனை யோடுதானே!
படித்திருந்தும் தோல்விக்குக் காரணம் அறிவார்ந்த எண்ணம்
நொடிப்போழ்தும் அவரறிவில் தோன்றா இழிநிலை யாமே! 1

அறியாமை உள்ளவர் உலகத்தில் என்றும்வாழ் கின்றனர்
பிறரைப்போல் நடித்து; உலகாய நிகழ்வை அறிய
மற்றவரை நாடுமிவர், வழியின்றி பயத்தில் உளறுவர்!
பற்றின்றி அவரே மற்றவர்போல் நடிப்பர் பயந்து! 2

இருவர்க்கும் வித்தியாசம் படிப்பறிவு ஒன்று மட்டுமே..!
புரிந்து கொள்ள வைத்திடலாம் படித்தவரை எப்படியும்
கல்வி அறிவில்லா மாந்தர்கள் யாவர்க்கும் புரிந்திட
சொல்லி முடியாது எவ்வழி முயன்றாலும் இனிதே! 3

நாகரிக இந்நாளில், எளிய வாழ்க்கை முறைதனில்
வேகமாக ஆற்றலோடு அறியாமை மாந்தரை எவ்வித
வேலையிலும் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாது;
பாலையென்று யாவரும் அவருறவை வைத்திட விரும்பார்! 4

வஞ்சி விருத்தம்

அதிநவீன முன்னேற்ற இவ்வுலகில்
புதியவை அறியாதும், போதிய
அடிப்படை முறையான கல்வியும்
படிப்பறிவு மின்றிவாழ் வதுகடினம்! 5

by Dr.V.K. Kanniappan

Comments (0)

There is no comment submitted by members.